Tuesday, March 13, 2012






1. செயற்கை கண் என்றால் என்ன? செயற்கை கண்கணால் பயனடைவோர் யார்?

இயற்கையில் கண் பார்வை இழந்தோர் சில காரணங்களால் கண்ணை எடுத்தபின் அதற்கு பதிலாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்தபட்ட பிளாஸ்டிக் சாதனத்தால் செய்த கண் செயற்கை கண் எனப்படும். இதில் பார்வை இருக்காது ஆனால் இயற்கை கண் இருப்பது போன்று தெரியும்.கண் பார்வை இழந்தவர்களின் கண் சுருங்கினாலோ அல்லது புற்றுநோயால் கண் இழந்தாலோ அல்லது பிறவியிலிருந்தே கண் இல்லாம்ல் போனவர்களுக்கோ பயன்படுத்தலாம்.

2. செயற்கை கண் பொருத்த தகுந்த வயது என்ன? செயற்கை கண்ணை பொருத்துவது யார்?

இதை எந்த வயதில் வேண்டுமானாலும் பொருத்தலாம். செயற்கை கண் சிறப்பு நிபுணர் என்பவர் செயக்கை கண்ணை செய்யவும், பொருத்தவும் திறம்பட பயிற்சி மேற்கொண்டவராவார். அவர் நேர்முக பரிசோதனைக்குப்பின் செயற்கை கண்ணை பொருத்துவார்.

3. செயற்கை கண் எத்தனை வகைப்படும்? செயற்கை கண் பொருத்த எவ்வளவு நாள் ஆகும்? எத்தனை வருடம் அல்லது நாட்களுக்கு ஒரு முறை செயற்கை கண்ணை மாற்ற வேண்டும்?

செயற்கை கண் இரண்டு வகைப்படும். எற்கனவே செய்துவைக்கபட்டவைகளிலிருந்து பொருத்துவது 'ஸ்டாக் கண்' எனப்படும் மற்றொன்று அளவெடுத்தபின் செய்வது 'சீரமைக்கப்பட்ட செயற்கை கண்எனப்படும். 'ஸ்டாக் கண்' ஒரெ நாளில் பொருத்தி விடலாம் 'சீரமைக்கப்பட்ட செயற்கை கண் செய்ய மூன்று நாட்கள் ஆகும். 'ஸ்டாக்' கண்கணாக இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையும், 'சீரமைக்கப்பட்ட செயற்கை கண்ணாக இருந்தால் 3 அல்லது 4 வருடத்திற்கு ஒரு முறையும் மாற்ற வேண்டும்.

4. செயற்கை கண் பொருத்தி கொள்வதின் பயன் என்ன?

செயற்கை கண் பார்ப்பவர்களுக்கு இயற்கை கண் உள்ளதைப்பொன்று தோன்றுவதால், தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும், மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் மனதைரியத்தையும் அதிகரிக்கும்.

5. செயற்கை கண் பொருத்தி கொள்வதால் ஏதேனும் உபாதைகள் உள்ளதா? செயற்க்கை கண்ணை எவ்வாறு பராமரிக்க வெண்டும்?

சுத்தமாக வைத்துக்கொள்வதால் எந்த உபாதைகளும் இல்லை. மற்ற கண்ணுக்கும் எந்த உபாதைகளும் இல்லை.'ஸ்டாக்' கண்ணை வாரத்திற்கு இரண்டு முறையும், 'சீரமைக்கப்பட்ட செயற்கை கண்ணாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையும் ஆண்டிசெப்டிக் திரவத்தாலோ அல்லது சுத்தமான குடிநீரிலோ சுத்தம் செய்யவேடும்.

6. செயற்கை கண்ணை பொருத்தி கொள்ள கண் மருத்துவரின் அனுமதி சீட்டு அவசியமா?

பொதுவாக கண்மருத்துவர் செயற்கை கண் நிபுனருக்கு அனுமதி கடிதம் வழங்குவார் அல்லது நேரடியாக செயற்கை கண் நிபுணரை தொடர்பு கொள்ளலாம்.

7. இதில் ப்ரீடம் ட்ரஸ்டின் பங்கு என்ன?

ப்ரீடம் ட்ரஸ்ட் இந்த தனித்துவம் வாய்ந்த செயற்கை கண் பொருத்தும் சேவையைச் செய்து வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

நம்பர் D 1/9 ,ஆனந்த் அப்பாட்மென்ட்ஸ்

(ஹொடெல் பரணி அருகில்)

50, L.B.சாலை, திருவான்மையுர், சென்னை- 41

தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

ஜெயஸ்ரீ (Jayasree) - 9003262021

ஹேமா ( Hema ) - 9382705849

No comments:

Post a Comment